பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



121


சனி 100 நாட்களும், ஜூபிடர் 518 நாட்களும் ஹேலியைத் தாமதப்படுத்தின. இதனால் 618 நாட்கள் கழித்து ஹேலிவால்மீன் தோன்றியது.

1758 டிசம்பரிலேயே ஒரு விவசாயி வால் மீனைப் பார்த்தார். பின்னர் பூமிக்கு மிக அருகாமையில் 1759-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்பட்டது.

சென்ற முறை நீளவட்டப் பாதையில் சென்றதைவிட இந்த முறை, 586, நாட்கள் அதிகமாயிற்று. ஒரு வால்மீனின் சுழற்பாறையில் 586 நாட்கள் மாறுபாடு என்பது; ஜூபிடர், சனி கிரகங்களின் ஈர்ப்புத் தன்மையினால் ஏற்பட்டது. பெளதீகத்தின் அடிப்படை உண்மையினை இது நிரூபித்தது.

அது முதல் அந்த வால்மீனுக்கு "ஹேலி'யின் பெயரையே விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் சூட்டி மகிழ்ந்தனர்.

"1759-க்குப் பிறகு 1835லும், பிறகு 1910லும் தோன்றி; இப்போது மீண்டும் 1986-ல் தோன்றி மக்களுக்குக் காட்சி தந்துவிட்டு ஹேலி மறைந்துள்ளது” என்று கூறி நிறுத்திய மேகநாதன், நண்பர்களைப் பார்த்தான்.