பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

105

மரபினைக்கொண்ட கடவுளாகிய கொற்றவையை வழிபடும் பொருட்டு, அவ் வழிபாட்டை நிகழ்த்தும் உயர்ந்தோன் தன் கையிலேந்திய அரிதாகப் பெறுதலையுடைய திரளையினைக் கண்டதும், அக்கொற்றவையின் ஏவற்பணி புரிவாளான கருங்கண்களையுடைய பேய்மகளானவள் கைபுடைத்தவளாக நடுநடுங்கியபடி நின்றனள். அங்ஙனமாக இரத்தங்கலந்த பிண்டங்களைத் தூவி வழிபாடாற்றிய, நிறைந்த கள்ளினாலே உண்டாகிய மகிழ்வைக் கொண்ட பெரிய பலியூட்டினை நீ செய்தனை. எறும்பும் மொய்க்காத வியக்கத்தக்க சிறப்பினையுடைய அப்பலிச்சோற்றைக் கரிய கண்களையுடைய அண்டங் காக்கைகளுடனே பருந்துகளும் மிகுதியாக இருந்து உண்டு செல்லும்—

பகை மறவர்க்கு அஞ்சிப் புறமிட்டு ஓடாத மறச் செவ்வியையும், வீரச் செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல் விளங்கும் கால்களையும் உடையவரும், பெரும் போர்களை வென்று பகைவரை யழித்த சிறப்பினரும், மேலும் போர்க்குச் செல்லுதலையே விருப்பமாகக் கொண்டிருப்போருமாகியவர் நின் படைமறவர்கள். அவர்கள், இடியிடித்து நிலப் பகுதியை அதிரச் செய்வதுபோன்ற கடுங்குரலோடு. யாழிசையோடு கலந்து ஆரவாரக் குரலை எழுப்புவர். அங்ஙனம் அவர் ஆரவாரிக்கப் பெருஞ் சோறாகிய பலியூட்டை அளித்ததற்கு முரசினை முழக்குவோனாகிய, கடுஞ்சினத்தை யுடைய வேந்தனே! நின் ஒலித்தலையுடைய வெற்றி முரசானது என்றும் இவ்வாறே முழங்குவதாக!

சொற்பொருள் விளக்கம்: இணர் - பூங்கொத்து. தகை தல் - நெருக்கமாக விளங்கல். மணி - நீலமணி. மா - கரிய. பாசடை - பசுமையான இலை. பனிக்கழி - குளிர்ந்த கழியிடம். துழைஇ - துழாவி. அங்குப் பற்றிய மீன்களை யுண்டு. வாலிணர் - வெண்ணிறப் பூங்கொத்துக்கள். படுசினை - பொருந்திய கிளைகள். குருகு -நீர்ப்பறவை வகை: வெண்குருகு என்று முன்பாட்டிலும் கூறப்பெற்றது. இறைகொள்ளல் - தங்கியிருத்தல். அல்குறுதல் - தங்குதல். கானல் கானற்சோலை. ஓங்குமணல் - உயர்ந்த மணல் மேடு. அடைகரை - நீரினை அடையும் கரைப்பகுதி; ஆற்றுத் துறை போல்வது. அடும்பு - அடும்பங்கொடி. தாழ் அடும்பு என்றது, அது கழி நீருள் தாழ்ந்து தொங்குவதை. வளை - சங்கு. ஞரலல் -ஒலித்தல். துகிர் - பவளம். முத் தெடுக்கச் சங்கினை எடுப்பார்க்கு அதனுடன் பவளக்கொடியும் சேர்ந்துவரும் வளத்தைக் குறிப்பார், 'முத்தமொடு