பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

23

பட்டுப் புண்களாயின. அப் புண்களினின்றும் ஒழுகிய குருதிப் பெருக்கினாலே, நீலமணியினது கிருநிறத்தைக் கொண்டதாய் இருந்த கழியின் நீரானது, தன் நிறத்தால் மாறுபட்டுக் குங்குமக் கலவைபோலக் கருமைகலந்த செந்நிறம் பெற்றும் தோன்றியது!

இங்ஙனமாக, நின்னைப் பகைத்தோரை எல்லாம் அடியோடும் வென்று அழித்தனை; அவர்தம் காவல் அரண்களையும் சிதைத்தனை; அவரை எல்லாம் வெற்றியும் கொண்டனை! வல்லமையாலே மேம்பட்டு விளங்கும் சிறப்போடே கூடிய, அத்தகைய உயரிய போர்ச்செயல் முயற்சியைக் கொண்டோனே! போர்மறவர்கள் மிகப்பலராக மொய்த்துக் காத்ததும், திரண்ட பூக்கள் கொண்டதுமாகிய கடம்பினது, காவலையுடைய அடியினை முற்றவும் வெட்டிவிடுமாறு, நீயும் நின் படைமறவரை அந்நாளிலே ஏவினை! அவரும், அவ்வாறே சென்று அதனை வெட்டிக் கொணர்ந்தனர். பிற வெற்றி முரசங்களை எல்லாம் தன் முழக்கொலியாலே வெற்றி கொண்டு முழங்குவதான நினக்குரிய வெற்றிமுரசினையும் அக்கடம்பின் அடிப்பகுதியாலே நீதான் செய்துகொண்டனை. பன்னாடையாலே வடிகட்டும் கள்ளினது மணம் கமழுகின்ற, பனம்பூவினால் ஆகிய மாலையை அணிந்தோனே! போர்க் களத்திலே பகைவரைக் கொன்றொழிக்கும் தானைவீரர்களின் பெருக்கினையும் உடையோனே! நெடுஞ்சேரலாதனே!

கடலினிடத்தே உள்ளவரான அப் பகைவரை வெற்றி கொண்டு, நீ நின் மார்பிடத்தே சூடிக்கொண்ட அந்த வெற்றி மாலையானது, நீ ஊர்கின்ற நின் போர்க்களிற்றது நெற்றிவரைக்கும் நீண்டு தொங்கும்! அப்படித் தொங்குதலாலே, அதன் நெற்றிப்பட்டத்தோடும் அதுதானும் கலந்தாற்போலவும் விளங்குகின்றதே! வெற்றிப் புகழாலே உயர்ச்சியுற்ற கொம்புகளைக் கொண்டதும், போரிற் பின்னடைதல் என்னும் பழியினின்று முற்றவும் நீங்கியது மான, அக் களிற்றது கழுத்திலே பொன்னரிமாலையும் அத்துடன் சேர்ந்து விளங்குகின்றதே! அதன் பிடர்மேல் அமர்ந்தோனாக நீயும் அழகுடனே வெற்றியுலா வருகின்றன! பொலிவோடு அப்படி உலாவரும் நின்னைப் ‘பலரும் புகழத் தக்க செல்வத்தைக் கண்டானொரு வறியவனைப் போலப்’ பெருமகிழ்ச்சியோடே யானும் இன்று இனிதாகக் கண்டு மகிழ்ந்தேனே!

முள்ளு முருக்கின் மரங்கள் அடர்ந்த பக்கமலைச்சாரலிலே படுத்து உறங்கும் கவரி மானானது, பகற்காலத்தே தான்