பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
பதிற்றுப்பத்து தெளிவுரை

மிழ்தினுமினிய செழுந்தமிழ் மொழியின் அவிர்சுடர் மணிகளாகத் திகழ்வன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகிய சங்கத் தொகைநூல்கள். அவற்றுள், எட்டுத் தொகையுள் விளங்கும் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, ஐங்குறுநூறு என்னும் எட்டு நூல்களுள், புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள்: அகநானூறு முதலாய பிறநூல்கள் ஆறும் அகத்திணை சார்ந்த நூல்கள்.

பழங்காலத் தமிழகத்தின்கண்ணே விளங்கிய ஒப்புயர் வற்ற மறமாண்பும், கொடைப்பண்பும், புலமைச்செறிவும், ஒழுக்கத்திட்பமும், அறநெறிச்சால்புமே இத்தகைய இணையற்ற செறிவான நூல்களின் தோற்றத்திற்குரிய நிலைக்களன்களாக விளங்கின. அத்தகு நூல்கள் பிற்காலத்தே எழாமைக்குக் காரணமும், அத்தகு பண்பட்ட நிலைக்களன்கள் செறிவுகுன்றித் தளர்வுற்றுப் போயினமையே யாகும்.

இலக்கியத் தோற்றமும் இலக்கியப் பயிற்சியும் செம்மையுடன் செழுமையாக வளர்ந்து செழிக்கவேண்டும் என்று