உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

பதிற்றுப்பத்து தெளிவுரை

 மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை 20

நந்து நாரையொடு செவ்வரி யுகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழன்மருள் பூவின் தாமரை வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பல் அறாஅ யாணரவர் அகன்றலை நாடே. 25

தெளிவுரை : இலையற்றதாய் உலர்ந்துபோன உச்சியையுடைய உன்னமரத்தினது அழகிய கவடுபட்ட கிளை யிடத்தே தங்கியிருந்தபடி, சிள்வீடு என்னும் வண்டுகள் கரையும்படிக்குப் பெரிதான பஞ்சம் வந்துற்றது. அதனாலே நிலம் பசுமை நீங்கிற்று; வயல்கள் விளைவின்றிக் கெட்டன. அத்தகைய வறட்சிக்காலத்தினும், நரம்பினாலே இழுத்துக் கட்டப் பெற்ற யாழ் முதலியவான இசைக்கருவிகளை இட்டுக்கட்டிய பையினைக் கொண்டவராய், நின் நகரத்தேயுள்ள ஊர் மன்றத்துக்குச் சென்றோம். அவ்விடத்தே, தெருக்களின் இருபுறத்துமுள்ள வீடுகள்தோறும் பாடிச் சென்றோம். அப்படிப் பாடிய கூத்தரும் பாணருமாகிய எம் கூட்டத்தாரது கடுமையான பசிநோய் நீங்குமாறு, பொன்னாற் செய்யப் பெற்ற புனைதற்கு உரிய அணிகலன்கள் ஒலிமுழங்கிக் கொண்டிருக்கப், பெரிதான உவப்புடனே, நெஞ்சத்தே மிக்கெழுந்த உவகையினை உடையவராக, எம்மவர் உண்டு, அம் மகிழ்ச்சி யினாலே பெரிதும் ஆடிக் களிக்குமாறு, சிறிது கள்ளையே உண்ட மகிழ்ச்சியைக் கொண்டவனாயினும், பெரிய அணி கலன்களை நீதான் வழங்கினை. போரிலே எதிரிட்ட பகைவரைக் கொல்லும் வன்மைகொண்டு தானைமறவரையும், பொன்னாற் செய்யப்பெற்ற பனம்பூமாலையையும் உடையவனாகிய குட்டுவனே!

மருத மரங்கள் தம்பாற் பல்வேறான பறவையினமும் தங்கியிருந்தபடி ஒலி செய்திருக்க உயரமாக வளர்ந்திருக்கும்; செறிவுடைய பெரும் பரப்பிடமாகிய மணல் மிகுந்த பெருந்துறையிடத்தே இருந்த காஞ்சியினிடத்தே முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரியும்; அதனாலே