பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பன்னிரு திருமுறை வரலாறு


பிள்ளையாரது முன்னை நிலை

முழுமுதற் கடவுளின் திருமகனராகிய முருகப் பெருமானே திருஞானசம்பந்தப் பிள்ளே யாராக அவ தரித்தருளினரென்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட் டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியிற் பாராட்டிப் போற்றியுள்ளார். திருப்புகழாசிரியராகிய அருணகிரிநாதர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சிகளே முருகப்பெருமான் இயற்றிய திருவிளேய டல்களாகத் திருப்புகழ்ப் பாடல் களிற் புகழ்ந்து போற்றியுள்ளார். இக்கருத்தே கொண்டு திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும்,

‘அரளுேடு வந்தம்மையளித்த வள்ளப்பாலேப்

புரை தீரவுண்டவரைப் போதமுறக்கண்டானே" என்ருங்கு ஞானசம்பந்தப்பெருமான் வரலாற்றுநிகழ்ச் சியை முருகப்பெருமான்மீது ஏற்றிப் போற்றியுள்ளார். சிவநெறி பரப்பும் புதல்வரை வேண்டித் தவம் புரியும் சிவபாத விருதயர் பகவதியார் ஆகிய அடியார் இருவர்க் கும் அருள்புரியத் திருவுளங்கொணட முருகப்பெரு மான், சீகாழிப்பதியிலே பிரமதீர்த்தத்தின் ஒரு பக்கத் திலே இளங்குழந்தையாக அருளுருக் கொண்டு எழுந் தருளினன் எனச் சீகாழிப் புராணம் கூறுகின்றது. *

திருஞான சம்பந்தர் முருகப்பெருமானது அவதா ரமேயென்பது உண்மையாயிருக்குமால்ை திருநாரை யூர்ப் பொல்லாப்பிள்ளே யார் திருவருளால் திருத் தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற சிவனடியார் களின் வரலாறுகளே வகைப்படுத்துணர்த்திய நம்பி யாண்டார் நம்பி தாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் பிரபந்தங்களில் முருகவேள் திருவவதாரமே ஞான சம்பந்பந்தரென்பதை மறவாது எடுத்தோதிப் போற்றி

1. பூதல மதனிற் காழிநன் னகரிற் புண்டரீகன் தடத் தொருசார், மாதவம்புரிவோர் முன்னிளங்கதிர் போல்

மதலேயாய் வந்தனன் முருகன்’

-சீகாழிப் புராணம்