பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுரை 128

மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்கள் என்பவறைப் பற்றிய இலக் கணங்கள் உள்ளன. -

தொல்காப்பியர் காலத்தில் ச, ச்ை, செள என்ற எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இல்லே என்பதும், ஞ, D, ஞொ, என்ற மூன்றை அல்லாமல், ஞா முதலிய பிற ஞகர வர்க்க எழுத்துக்களை முதலாக உடைய தமிழ் வார்த்தைகள் வழங்கவில்லே என்பதும், யகர வருக் கத்தில், யோ’ என்பது ஒன்றுதான் தமிழ்ச் சொல்லில் முத லில் வருமென்பதும் சில சூத்திரங்களால் தெரிய வருகின் றன. உசு, முசு என்ற இரண்டு வார்த்தைகளே, சு’ என்ற முற்றுகரத்தை இறுதியிலே பெறுவன என்றும், பு’ என்ற முற்றுகரத்தை ஈருகவுடைய சொல், தபு’ என்ற ஒன்றே என்றும், பொருந், வெரிந் என்ற இரண்டுமே, ‘ந்’ என்று முடியுமென்றும், உரிஞ் என்ற ஒன்றே ஞகரத்தில் முடிவதென்றும், வகரத்தில் முடிவன, அவ், இவ், உவ், தெவ்' என்ற நான்கு மொழிகளே என்றும், மகரம் திரிந்த னகரம் இன்றி இயற்கையாகவே னகர ஈருக முடியும் அஃறிணைச் சொற்கள் ஒன்பது என்றும் (எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான்) சில சூத்திரங்கள் புலப்படுத்துகின்றன.

மூன்றவது, பிறப்பியல் இன்ன இன்ன உறுப்புக்கள் இன்ன இன்னவாறு தொழிற்படுவதால் எழுத்துக்களின் ஒலி உண்டாகுமென்பதைச் சொல்வது. இதில் 20 சூத்திரங்கள் உள்ளன. ..

உந்தியில் தோன்றிய உதானன் என்னும் வளி யானது தலே, கண்டம், நெஞ்சு என்ற இடங்களில் வந்து தங்கிப் பல், இதழ், நாக்கு, மூக்கு, மேல் வாய் என்ற உறுப்புக்களின் தொழிலால் எழுத்துக்களாக ஒலிக்கும் என்பதும், இன்ன இன்ன இட்த்தில் இன்ன