உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பயப்படாதீர்கள்

நிகண்டைப் போலச் சொற்களின் பொருள்களை உரைக்கும் முறையைக் காணலாம். -

இப்படியாக எழுத்து, சொல், பொருள் என்று. தொல்காப்பியர் சொன்ன இலச்ணம் மிக மிக விரித்து எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், நிகண்டு, அகப் பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், பாட்டியல் என்று Ltడ} வகைகளாயிற்று. வளர்ந்துவரும் மொழியில் இலக்கியங்கள் வளர வளர இலக்கணங்களும் வடைவது, இயல்பேயாகும். இனியும் இலக்கணம் விரிவடைய வேண்டியதுதான். வடமொழியின் தொடர்பில்ை தமிழ்ச் செய்யுள் இலக்கணமும் அணி இலக்கணமும் விரிவை அடைந்திருக்கின்றன. அப் படியே ஆங்கிலத்தின் தொடர்பினுல் புதிய புதிய இலக்கணங்கள் தோன்றுவதற்கும் இடம் உண்டு. மொழியின் வளர்ச்சி முறையை ஆராயும் மொழி நூல்' (Philology), இலக்கியத்தை மதிப்பிடும் ஆராய்ச்சி (Criticism) முதலிய வகைகள் மிக மிக விரிவடைய வேண்டும். அப்படி விரிவடைவதே தமிழின் பெரு மைக்குக் காரணம் என்பதை அதனுடைய சரித்திரம்: நமக்கு விளக்குகிறது. - , , , , , . . . . .