பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து விசித்திரம் 65

அதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். தலையிலே ஒரு புள்ளி இருக்கட்டும்; அதன் வயிற்றிலே ஒரு புள்ளி போடுங்கள் என்ருர்கள். ம்ே என்ற எழுத்தில் சுழி போன்றுள்ள பகுதிக்கு நடுவே ஒரு புள்ளி போட்டு அதிை, மகரக் குறுக்கம் என்ற பெயரால் குறித்தார்கள்.

உேட்பெறு புள்ளி உருவா கும்மே? என்று தொல் காப்பியர் அதை வருணிக்கிருர். தலையிலே பெற்ற புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளியைப் பெறுதல் அந்த மகரக் குறுக்கத்தின் உருவமாகும்’ என்பது இதன் பொருள்.

மெய்யெழுத்துக்களுக்கும் குறுகிய எழுத்துக் களுக்கும் புள்ளி போடுவதோடு உயிரெழுத்துக்களி லும் இரண்டெழுத்துக்களுக்குத் தலைப்புள்ளி பழைய காலத்தில் இருந்து வந்தது.

எ, கே, ஒ, கொ என்று எழுதினல் பழைய காலத் தில் ஏ, கே, ஒ, கோ என்றுதான் படிப்பார்கள். அவற். றின் மேலே புள்ளி வைத்தால்தான் இப்போது நாம் படிப்பது போலக் குற்றெழுத்துக்களாகப் படிப்பார் கள். ஏ யில் கீழே சாய்வாக இழுக்கும் கோடும், கே யில் உள்ள இரண்டு சுழிகளையுடைய கொம்பும் ஒவில் உள்ள கீழச்சுழியும், கோ வில் உள்ள கொம்பின் தலைச். சுழியும் பிற்காலத்தில் வந்தவை, ஏட்டுச் சுவடிகளில் உள்ள எழுத்துக்களில் ஒன்றுக்காவது புள்ளியே இராது. எழுத்தாணியால் குத்தில்ை ஒல் ஒட்டை யாகிவிடு மென்று எண்ணினர்களோ என்னவோ, மெய்யெழுத்தானுலும் சரி, வேறு எழுத்தானுலும் சரி; புள்ளியே போடுவதில்லை. கேட்கவேணும்’ என்பதை - பய.-5