பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வேண்டிய உணவு முதலிய துகர்பொருள்களைப் பகற். காலத்தே பெற்றுக் செல்லும் கடைவீதியாக அமைந்த தாலேயே நாளங்காடி எனப் பெயர் பெற்றது.14 நாளங் காடிப் பகுதியின் கலகலப்பான நிலைமையையும் இளங்கோ அடிகள் பின்வரும் உவமை மூலமாக விளக்குகிறார்.

இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபாற் பகுதியின் இடைநிலமாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்ற நிலைஇய நாளங்காடியில்15

மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடை நிலமாகிய நாளங்காடி இருபெரு வேந்தர் முனையிடம் போல விளங்குகிறது. முனையிடம் ஆரவாரத்திற்கு உவமை. போர் குறித்து வந்துவிட்ட பாசறை இருப்புக்கு நடுப்பட்ட நிலமென்பார் அடியார்க்கு நல்லார். 16 அல்லங் காடியும் உண்டாதலின் இதனை நாளங்காடி என்றார்17 என அடியார்க்கு நல்லார் உரையிற் கூறுதலால் அல்லங்காடி என ஒரு பகுதியும் இருந்தது.

பட்டினப்பாக்கம்

நாளங்காடிப் பகுதிக்கு மேற்கே பட்டினப்பாக்கம் மன்னவன் அரண்மனை அமைந்திருந்த இடமாகும்.

அரசவீதிகள், தேரோடும் தெருக்கள் கடைத் தெருக்கள். தன வணிகர்களின் மாடமாளிகைகள் உள்ள பெருந்தெருக்கள், அந்தணர்கள் வாழும் மனைகள் விளங் குகிற தெருக்கள், உழவர், மருத்துவர், காலக் கணிதர், சோதிடம் முதலியோர் தத்தம் தொழிலுக்கு ஏற்றபடி வாழும் தெருக்கள் எல்லாம் பட்டினப்பாக்கத்தில் இருந்தன. 18