உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

163


இவர்கள் எல்லாம் இந்த ஒளி பொருந்திய நெடிய கல்லை. வலமாகச் சுற்றி வந்து தொழுதால் நோய் நீங்கி நலம் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.24

பூத சதுக்கம்

இங்கு பூதம் ஒன்று உண்டு.25 அது பொய்யான தவ வேடங் கொண்டு அவ்வேடத்திற்கு ஏற்ப நடவாமல், பிறரை ஏமாற்றும் போலித் துறவிகள், கணவரை வஞ்சித்து ஏமாற்றி ஒழுகும் பெண்கள், மன்னனுக்குக் கேடு நினைக்கும் நன்றியற்ற அமைச்சர், பிறர் மனை விழைந்தோர், பொய் சாட்சி கூறுவோர், புறம் பேசுவோர் ஆகிய இவர்களை இப்பூதம் தண்டிக்கும் என்று கூறப்படுகிறது.26

பாவை மன்றம்

ஆளும் அரசன் செங்கோல் முறை தவறிச் சென்றாலும், அறங்கூறும் அவையத்தார் நடுவுநிலை தவறினாலும், அதனை நாவாற் கூறாமல் கண்ணாற் கூறும் பாவையை உடையது பாவை மன்றமாயிருந்தது.27

மன்றங்களின் பயன்

புகார் நகர அமைப்பில் இம்மன்றங்களின் பயன் குறிப்பிடத்தக்கது. நகரில் கள்வர் பற்றிய பயம், போலித் துறவு, பெண்கள் கொண்டவரை வஞ்சித்தல், பிறர் மனை நயத்தல், அரசத் துரோகக் குற்றம், பொய்ச் சாட்சி சொல்லுதல், புறங்கூறுதல் ஆகிய தீச்செயல்கள் இல்லாதிருந்தமைக்கும். நகரின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தக்க சான்றுகளாக இம்மன்றங்கள் இருந்தன.28

மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி’ என்ற பெயரில் குடியிருப்புகளுக்கும், பிற பகுதிகள்