உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

199


கத்தை நெருப்பாகவும் பயன்படுத்தினர். பொன்னாற் செய்த பாத்திரங்களில் சமைத்தனர்.

வணிகர் வீதி வீடுகளின் கதவங்கள் செம்பொன்னாலும், தாழ்ப்பாள்கள் வயிரத்தாலும் செய்யப்பட்டிருந்தன. வணிகர் வீதிகளில் மணிகளும் பொற்கட்டிகளும் முத்துக்களும், மரகதங்களும், வயிரங்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன”. 58

இந்த வருணனை மூலம் மதுரை நகரின் செல்வ வளமும், நகரமைப்பில் வணிகர் வீதியின் செழுமையும் தெரிய வருகின்றன.

அரச வீதிகள்

குடிமக்களின் துன்பமாகிய இருளைப் போக்கும் அரசன் புற இருளை நீக்கும் கதிரவனுக்கு ஒப்பாகக் கருதப்பட்டான். அவ்வாறு கருதப்பட்ட அரசர்தம் தொடர்புடைய வீதிகளும் இடங்களும், மதுரை நகரில் எப்படி எப்படி இருந்தன என்பது நூல்களில் கூறப் பட்டுள்ளது.

அரசர் வீதியில் குதிரைக் கூடங்களும், யானைக் கூடங்களும் மிகுதியாக இருந்தன. மழுவச்சிரம், வில், அம்பு, சூலம், சக்கரம், வேல், நெருஞ்சி முள் போன்ற கருவி, கலப்பை போன்ற ஆயுதம் முதலிய பல்வேறு படைக் கருவிகளைக் கொண்ட கொற்றவையின் கோயிலுடன் கூடிய படைக் கொட்டாரங்கள் இருந்தன.

அரசிளங்குமாரும், அவரை ஒத்த பிறரும் போர்ப் பயிற்சி பெறும் பல இடங்களும் இருந்தன.

அரச வீதியின் மாட மாளிகைகள், நீல மணிகளும், மாணிக்கமும், பொன்னும், சந்திரகாந்தக் கற்களும் பதிக்கப் பெற்றுப் பளிரென மின்னின.