பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

201


வலமாக ஏந்திய பலதேவர் கோயிலும், சேவற்கொடியையுடைய முருகவேள் கோயிலும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என இவை நகரில் அமைந்திருந்தன. பெளத்தப் பள்ளி, அமணப் பள்ளி, அந்தணர் பள்ளி என இமூவகைப் பள்ளிகள் இருந்துள்ளன. 70

இவற்றுள் திருமால் கோயில் என்பது இருந்தையூர் என்னும் நகரின் உட்பகுதியில் அமைந்திருந்தது என்றும் அதனருகே வையையின் மற்றொரு பிரிவாகிய கிருதமாலை நதி ஓடியது என்றும் கூறுகிறார் மு. இராகவ ஐய்யங்கார். 71

அறங்கூற வையம்

மதுரை நகரில் கோயில்கள், பள்ளிகள், தவிர அறங்கூறும் அவையங்களும் இருந்தன. அறங்கூறும் அவையங்களுக்கு அடுத்தபடி காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்களுடைய வளமனைகள் அமைந்திருந்தன. அவற்றை அடுத்துப் பிற நாடுகளில் இருந்து வந்து வாணிகத்தால் பொருள் திரட்டிய வணிகர் வாழும் வீடுகள், இருந்தன. புரோகிதர், ஒற்றர், தூதுவர், சேனைத் தலைவர் முதலியோர் வாழும் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. 72

அங்காடிகள்

இரவுக்கடை வீதிகளும், பகற்கடை வீதிகளும் தனித் தனியே இருந்தன. அவை அந்தி அங்காடி (அல்லங்காடி) நாளங்காடி என அழைக்கப்பட்டன. இன்றைய மதுரையிலும் கூட அந்திக் கடைப் பொட்டல்’ என ஒரு பகுதிக்குப் பழங்கால முதலே பெயர் வழங்கி நீடித்து வருகிறது.

சங்கினால் வளையல் முதலியன செய்யும் வினைஞரும், மணிகளைத் துளையிடுபவரும் பொற்கொல்லரும், பொன் வாணிகரும், ஆடை விற்பவரும் மணப்பொருள்கள் விற்பவரும், நெய்தற்றொழில் செய்பவரும், ஓவியர்களும்