பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


தொழில், நுண்கலை, கைவினை எல்லாமே பேரளவு இதில் அடங்கி விடுகிறது.3

அடுத்து இனி வருவது பட்டினப்பாக்கம் இராசவீதி (Kingsway) எனப்படும் செண்டு வெளிப்புறத் தெருவும், விழா வீதிகளும், வணிகர் குடியிருப்பும், மறையோர்களாகிய பஞ்சக்கிராமிகள் இருப்பும், வேளாளரும், மருத்துவ நூலாரும், சோதிட நூலாரும், பல முறைமையோடு இருக்கும் இருப்பிடங்களும், முத்துக் கோர்ப்பவர்களும், சங்கு அறுத்து வளை செய்பவர்களும், நின்றேத்துவார். இருந்தேத்துவார் தம் தெருக்களும், வைதாளியாடுவாரும், கடிகையார், சாந்திக் கூத்தர், களத்தாடும் கணிகையர், அகத்தாடும் பதியிலார், பூவிலை மடந்தையர் மடைப்பள்ளியாரடியார் தோற்கருவிகளை இசைப்பர். படைக்கும் உற்சவத்துக்கும் கொட்டுவார்,நகை வேழம்பர். குதிரை செலுத்துவோர், யானைப் பாகர்கள், தேர்ப் பாகர்கள், காலாட்படைத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய பட்டினப்பாக்கம் என விவரிக்கப்படுகிறது. பல்வேறு சமுதாய மக்களை இன்று போல் சாதி வகைப்படுத்தாமல் தொழிற் சமுதாயமாக வகைப்படுத்தியுள்ள சிறப்புக் கூர்ந்து நோக்கத்தக்கது.4

இரு பாக்கத்திற்கும் நடுவே இருந்த நெருங்கிய மிடைமரச் சோலையில் "நாளங்காடி"5 இருந்தது எனக் கூறி மேலே போகிறது. காப்பியம், நாளங்காடியின் கூட்டமும் ஓசைகளும் வருணிக்கப்படுகின்றன.

மேலும் இதே சிலம்பின் புறஞ்சேரியிறுத்த காதையில், மதுரை நகரமைப்பு அகநகர்-புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது தெரிகிறது.6 ஆயர்-ஆடுமாடுகளை வளர்ப்போர்-பால் தயிர் நறுநெய் தருவோர் புறஞ்சேரியில் ஆயர்பாடி என்ற தனிப்பகுதியில் வாழ்ந்ததும் தெரிய வருகிறது. அரசர், மறையோர், வீரர், பொற்கொல்லர் முதலியோர் அக நகரில்7 இருந்தமையும் கூறப்பட்டு