பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



அவற்றைப் பழந்தமிழர் செய்திருக்கின்றனர். செஞ்சிக் கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மகால், தஞ்சை சரசுவதி மகால் போன்ற கட்டடங்களின் மழமழப்பான சுவர்கள், தூண்கள். விட்டங்கள், மாடங்கள், உரோமாபுரியிலும், ஏதென்சிலும் (கிரேக்க நாட்டுத் தலைநகரம்) உள்ளவை போன்ற பார் புகழும் கட்டடங்களை நினைவூட்டுவதை அறிஞர் உணர்வர்.

உலகப் புகழ் ஒப்புநோக்கு

ஏதென்சு அருகிலுள்ள அக்ரோபோலிசு மாளிகைச் சிதைவின் தூண்களை ஒத்த அழகிய தூண்களை மதுை மகாலில் காண முடிகிறது.

மாட வீதி, தேரோடும் வீதி, சிறு தெருக்கள், மறுகு, கவலை, சந்தி, சதுக்கம் எனத் தெருவமைப்பிலேயே நகரங்களைப் பயனுற அமைத்துள்ளனர் தமிழர்.

பின் மூன்று இயல்களில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சி, உறையூர் போன்ற தமிழர் கோநகரங்களைப் பற்றியும் அவை அமைந்த சிறப்புப் பற்றியும் நூற்சான்றுகளுடன் காண முடிந்திருக்கிறது. கிடைக்கும் சான்றுகள் வியக்கச் செய்கின்றன.

மனைநூல் மரபு, சான்றுகளிலிருந்து உய்த்துணர்ந்து வரைய முயன்ற சில விளக்கப் படங்களையும் இவ்வாய்வின் பின்னிணைப்பில் தர முடிந்திருக்கிறது. தமிழகச் சிற்பக் கலை வளர்ந்து, சிற்பிகள் பெருக வேண்டும். இன்று சிற்பிகள் அருகி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

எதிர்காலத்தில்

கட்டடக் கலையையும், கோநகரங்களையும் மட்டுமே ஆய்ந்த இவ்வாய்வைத் தொடர்ந்து வருங்கால ஆய்வாளர் தமிழக ஊர்கள், சிற்றூர்கள், சிற்றூர் மக்கள் பயன்படுத்