பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

பதில் மணல் தளத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டடங்கள் எழுப்புவது ஒரு தனிக்கலையாகும். சற்றுக் கடினமான கலையும்கூட.17

அணைக்கட்டு எழுப்பிய பின்னும்கூட அதன் அடியில் இருக்கும் மணல் தளத்தின் வழியாகத் தண்ணீர் துருவிச் செல்வது தொடர்ந்து இருந்துவரும்.

இப்படிப்பட்ட கட்டமைப்புக்களை கசியும் அடித்தளத்தில் அமைந்த கட்டிட்டங்கள் (Structures on pervious Foundations) என்று கூறுவார்கள். அணையின் மேல் வழிந்து செல்லும் நீர் அதன் கீழே கசிந்து செல்லும் நீர் இரண்டாலும் பாதிக்கப்படாத வகையில் இதுபோன்ற அணைகள் அமைய வேண்டும். இன்றைய வளர்ச்சி நிலையில் கூட அவை சிக்கல் நிறைந்தவை.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கல்லணை போன்ற ஒரு சாதனத்தை எழுப்பிய சமுதாயத்தில் 'சில அடிப்படைப் பொறியியல் முறைகள்' இருந்திருக்க வேண்டும். அவற்றை அறிவதற்கான ஏடுகள் தமிழில் இல்லை அல்லது இதுவரை கிடைக்கவில்லை.18

இது தவிர மேற்கே ஆப்ரிக்கக் கண்டம் தொடங்கிக் கிழக்கே பிலிப்பைன்ஸ் தீவு வரை தமிழர்கள் சென்று நீர்ப் பாசனக் கட்டட வேலைகள் செய்ததாக ஃபிளெமிங் என்ற அறிஞர் கூறுவதாக டாக்டர் வா.செ.குழந்தைசாமி. தெரிவித்துள்ளார்.19

தமிழர் கட்டிடக் கலையின் தனிச் சிறப்பு

கிரேக்க உரோமானியக் கட்டடக்கலையின் இணைந்த சிறப்பாக ஐரோப்பாவில் (Gothic) கூம்பு வடிவ விமானம் கூறப்படுவது போல் தமிழகப் பழங்காலக் கட்டடக் கலையின் சிறப்பாகக் (Classical Architecture of Tamils) கோபுரத்தைக் கூறலாம். ஆங்கில அகராதிகளிலும்