பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இடம் அமையச் செய்து கொள்வதே உயர்வு அளிக்கும் என்கிறது மனைநூல்.30

(1) இந்திர திசை எனப்படும் மனையின் கிழக்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமாயின் பொருளும் செல்வமும் பெருகும். 31

(2) அக்கினித் திசை எனப்படும் தென்கிழக்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமானால் கட்டப்படும் கட்டடம் இடிந்து பாழாகிவிடும்.

(3) எமன் திசை எனப்படும் தெற்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமாயின் அக் கட்டடத்தில் உள்ளார்க்குத் துன்பம் தொடர்ந்து வரும்.

(4) நிருதித் திசை என்று கூறப்படும் தென்மேற்குத் திசையில் புற்றுத் தென்படுமாயின் கட்ட்டத்திற்கு உரியோன் எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்று உயர்ந்த வாழ்வைப் பெறுவான்.

(5) வருண திசை எனப்படும். மேற்குத் திசையில் புற்றுத் தோன்றுமேயானால் நன்மக்கட்பேறு - புத்திரப் பேறு அடைவர்.

(6) வாயு திசை எனப்படும் வடமேற்குத் திக்கில் புற்று உண்டாகில் மரணம் ஏற்படும்.

(7) குபேர திசை எனப்படும் வடக்குத் திசையில் புற்றுத் தோன்றினால் அனைத்துச் சிறப்பும், செல்வமும் சீரும் பெறுவார்கள். - -

(8) ஈசானிய திசை எனப்படும். வடகிழக்குத் திசையில் புற்றுத் தோன்றினால் அனைத்து நாளும் பிணி, பெருகி நலிவடையும்.

(9) கட்டட மனையின் மேற்கூறிய எட்டுத் திசையும் அல்லாமல் இவற்றுக்கு நடுவில் உள்ள நடுவன் மனைப்