பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வாசற்கால், துரண், பலகணி போன்றவற்றிற்கு ஆண் மரங்களையே பயன்படுத்த வேண்டும்.

உத்திரம், விட்டம், வளை, தாழ்வாரம் தாங்கிக் கட்டை, சிறுதுண், சுமைதாங்கிக் கட்டை ஆகிய வற்றுக்குப் பெண் மரங்களைப் பயன்படுத்தலாம்.

சிறுவிட்டம், சட்டம், கைகள், வேலி ஆகியவற்றிற்கு அலி மரங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

காட்டில் சென்று மரம் வெட்டிவர அல்லது மரம் வாங்கவும் காலநேரப் பொருத்தங்கள் கூறுகிறது மனை

இனி இன்னின்ன வருணத்தார்க்கு இன்னின்ன மரம் நலம் தரும் எனக் கூறப்படுவதனையும் மனைநூலில் காண முடிகிறது.

தேவர்க்கு மாமரமும், அந்தணர்களுக்கு வேப்ப மரமும், அரசர்களுக்குத் தேக்குமரமும், வணிகர்களுக்கு இலுப்ப மரமும், வேளாளர்க்கு வேங்கை மரமும் நலம் தருபவை என்று மனைநூல் விவரிக்கிறது.

வாசல் இராசி - விசால லட்சணம் 57

தெற்கு முகம். மேற்கு முகம் கட்டிய விடு விசாலத்துக்குக் கமலாகரம் எனப்படும்.

இதன் பலன் லட்சுமி பிரதம்.

மேற்கு முகம், வடக்கு முகம் கட்டிய வீடு விசாலத் துக்கு சுவர்ண பலம் எனப்பெயர்.

இதன் பலன் சோரபயமும், பீடையுமாம்.

வடக்கு முகம், கிழக்கு முகம் கட்டிய வீடு விசாலத் துக்குப் புஷ்கத முஷ்டிகம் எனப் பெயர்.