பக்கம்:பாடுங்குயில்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்பனி நிலவில் தனிநடம் புரிவாள் தளிரில் மலரில் பனியென உறைவாள் கண்துயில் மருவும் பசும்புல் தரையாள் களிகொள் மயில்போல் ஆறெனத் திரிவாள்

-அவளும்

மாலையில் நாணிச் சிவந்திட வருவாள் மருளும் மாலையை மயங்கிடத் தருவாள் சீலையென் றிரவினைத் தாங்கியே திரிவாள் சிரித்திடச் சிரித்திட விந்தைகள் புரிவாள்

-அவளும்

செடிகொடி விரிக்கும் மலர்களிற் சிரிப்பாள் சிதறிய மலர்களிற் பஞ்சணை விரிப்பாள் மிடிகெட உழைக்கும் தோள்களில் இருப்பாள் மேதினி யாவும் மேம்படும் விருப்பாள்

-அவளும் உழுபவன் கலப்பையின் முனைதனில் நடப்பாள் உளிகொளும் சிற்பியின் விரல்களில் நடிப்பாள்

2 இழைகொளும் பாவினில் அபிநயம் பிடிப்பாள்

எழுச்சிகொள் கவிஞனுக் குணர்ச்சியைக் கொடுப்பாள்

- அவளும்

ത കൃ:ef് ി سے بج رہی.29 صلى الله عليه وسلم ۶)

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/123&oldid=593998" இலிருந்து மீள்விக்கப்பட்டது