பக்கம்:பாடுங்குயில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னை உழைப்பினை நம்பு-யாரோ ஒதிய வேதத்தை நம்பில்ை வம்பு

பொன்னை வளர்த்திடுந் தெம் பு-நாட்டிற்

பூத்துக் குலுங்கிட நாடிக்கி ளம்பு

ஆலைத் தொழில்புரிந் தாலும்-பள்ளி

ஆசிரி யப்பணி ஏற்றிருந் தாலும் சிலைத் தொழில்புரிந் தாலும்-எங்கும்

சீருடன் நின்கடன் ஆற்றுக நாளும்

நாட்டையும் உன்னையுஞ் சேர்த்து-நெஞ்சில்

நாளும் நினைத்தே உழைத்திடு வேர்த்து வீட்டையும் நாட்டையும் பார்த்து-தம்பி

வீறுகொண் டேனழு தோள்களை ஆர்த்து

நான்முகன் உன் மண்டை ஒட்டில்-ஏதோ

நாட்டினன் என்பதை நெஞ்சைவிட் டோட்டில்

ஏன் வறு மைத்துயர் நாட்டில்?-தம்பி

ஏறுமுன் னேறுழைப் பாலுயர் கோட்டில்

7

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/61&oldid=593930" இலிருந்து மீள்விக்கப்பட்டது