பக்கம்:பாடு பாப்பா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடலின் அலைகள் கரையை மோதித்
திரும்பிச் சென்றன
குடுகு டென்று நண்டுப் பிள்ளைகள்
ஓடி வந்தன!

எத்தனை வேகம்! எத்தனை வேகம்!
என்னைப் பார்த்ததும்
அத்தனை நண்டும் ஓடி ஒளிந்தன
பொந்து மணலிலே!

ஓடி ஒளியும் வீரர்களே
திரும்பி வாருங்கள்
ஒன்றும் தொல்லை இல்லை என்னால்
ஓடி வாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/18&oldid=1315802" இலிருந்து மீள்விக்கப்பட்டது