பக்கம்:பாட்டும் கதையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரு மலைபோலே - இந்த மேதினியில் உயர்ந்தோன் நேரு பெருமான - நெஞ்சில் நித்தம் நினைத்திடுவோம். பூக்கும் மலர்களெலாம் - அவன் புன்னகை தானேடா ? ஆக்கள் தரும்பாலும் - அவன் அமுத மொழியோடா ? திங்கள் தரும்குளிர்தான் - அவன் திருவிழிப் பார்வையடா பொங்கும் கடல்மடைதான் - அவன் புகன்ற சொற்களடா சாதி மதத்தாலே - வரும் சண்டைகளை வெறுத்தான் நீதிக் கொடிபிடித்தான் - நம் நெஞ்சில் நிலைத்துவிட்டான் 45