உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பகுதி கரைந்து போய்விட்டது. கழுதை யின் தந்திரத்தைக் குப்பன் அறிந்தான். கழுதைக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினன். ஒருநாள் மணல் மூட்டை யொன்றைக் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு குப்பன் நீரோடையின் வழி யாக வந்தான். கழுதை அன்றும் நீரில் விழுந்தது. மணல் நீரில் நனைந்ததால் மூட்டை மிகவும் கனமாகிவிட்டது. கழுதை இன்று சுமை தாளமுடியாமல் தத்தளித்தது. குப்பன் தடியால் நன்ருக அடித்தான். அன்றி லிருந்து கழுதை இது போன்ற தவற்றினைச் செய்வதில்லை. “ஒருநாள் ஒருவரை ஏமாற்றலாம் பலநாள் பலரை ஏமாற்ற முடியாது. ”