உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வழியில் ஒர்நாளில் காந்தித் தாத்தா நண்பருடன் மாட்டு வண்டியின் மீதேறி மாநகர் நோக்கிச் சென்ருரே. எட்டி நடந்த மாடுகளில் ஏதோ ஒன்றின் கழுத்தினிலே சொட்டுச் சொட்டாய் இரத்தம்வரச் சோர்வாய் அதுவும் சென்றதடா. புண்ணைக் கண்டார் காந்திமகான் புந்தி நொந்தார் காந்திமகான் கண்ணிர் விட்டார் காந்திமகான் கருணை கொண்டார் காந்திமகான். 76.