உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணும் எழுத்திரண்டும் கண்ணே- மிக ஏற்றம் உடையகலை கண்ணே பண்ணும் படக்கலையும் கண்ணே - நீ பயின்று முடித்திடடி கண்ணே அன்பொன்றே தெய்வமடி கண்ணே-உன் அறிவொன்றே கோயிலடி கண்ணே துன்பம் துடைப்பதுதான் கண்ணே-நல்ல தொழுகைஎன் றறியாயோ கண்ணே ஆடற் கலைபயில்வாய் கண்ணே - நீ அன்புக் கலைபயில்வாய் கண்ணே பாடம் படித்திடுவாய் கண்ணே - நீ பண்பை வளர்த்திடுவாய் கண்ணே 86