உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

139

குழந்தை இறப்பைத் தடுப்பது எப்படி? : கருவுற்றிருக்கும்போது தாய்க்குப் போதிய கவனிப்பு இல்லாமை, பிரசவத்தை மருத்துவமனையில் வைத்துக் கொள்ளாமல் இருத்தல், புட்டிப்பால் கொடுத்தல், கைகளைப் பெற்றோர் சுத்தம் செய்யாமல் இருத்தல், அட்டவணைப்படி, தடுப்புசி போடாமல் இருத்தல், ஆகிய காரணங்களால் குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில், பிறந்து ஒரு வயதுக்குள், 1000 த்துக்கு 56 குழந்தைகள் இறக்கின்றன.

புட்டிப் பால் செய்யும் தீமைகள் : புட்டிப் பால் கொடுத்தால், சளி அதிகமாக இருக்கும்; வயிற்றுப் போக்கு இருக்கும். நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்படவும், காதில் சீழ் வடியவும் வாய்ப்புகள் அதிகம். பவுடர் பாலில் உப்புத் தன்மை அதிகம் என்பதால், குழந்தையின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் . புட்டிப் பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, பிறந்து 45வது நாளிலேயே கரோனரி ரத்தக் குழாயில் அடைப்பு உருவாகி, எதிர்காலத்தில் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

புட்டிப்பால் சரியாக ஜீரணிக்காது, அதில் உள்ள புரதச்சத்து காரணமாக, ஒவ்வாமை ஏற்படும். சளி, காய்ச்சல், உடல் பருமன் ஆகியவற்றுக்குப் புட்டிப் பால் வழி வகுத்துவிடும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை பிறந்து முதல் நான்கு மாதம் லீவு எடுத்துவிட்டு, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் பாலைப் பீய்ச்சி எடுத்து, வீட்டில் உள்ளோர் மூலம் கொடுக்கலாம்.