பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தற்றுவது -------- -o- m I'ii வானவர் ஆதி, வானவர் தெய்வம், வானவர் போகம், வானவர் முற்றும், ஊனமில் செல்வம், ஊனமில் சுவர்க்கம், ஊனமில் மோக்கம், இங்கு ஊனமில்லாத செல்வம், சுவர்க்கம், மோட்சம் என்று ஆழ்வார் குறிப்பிடுவதைக் கவனிக்கவும்) இன்னும் நளிர் மதிச்சடையன், நான்முகக் கடவுள், உலகமெல்லாம் படைத்தவை எல்லாமே கண்ணன் (கடவுள்) மயம் என்றும், மேலும், யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன் புலன் ஐந்திற்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆது மோர் பற்றில்லா பாவனை கொண்டவன்" என்றெல்லாம் சிறப்பாக எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். இது ஒரு மிக உயர்ந்த தத்துவ நிலையாகும். இவ்வாறு உலகமனைத்தையும் கண்ணன் வடிவத்தில் காண்பதைப் போல பாரத மாதாவின் மிக உயர்ந்த மிக மேலான வடிவத்தை பாரதத்தின் முழுமையான வடிவத்தை பாரதி காண்கிறார். அதுவே பாரதியின் தேசியமாகும். அந்தத் தேசீயத்தின் முழுமையை முழுமையான உள்ளடக்கத்தையும் வெளிப்பாடுகளையும் அவருடைய தேச பக்தப்பாடல்களில் காண்கிறோம். அப்பாடல்களின் கருத்துக்களும், கருத்து வடிவங்களும், பாடல் வரிகளும் இந்த நூலில் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. "ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தான் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இமயம் முதல் குமரி வரையில் ஆப்கானிஸ்தானத்தின் கிழக்கு எல்லை முதல் பர்மா (மியன்மார்) வின் மேற்கு எல்லை வரை ஒரே ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அரசியல் பூர்வமாக இந்தியா என்னும் தேசத்தை உருவாக்கினார்கள்.” என்று சில ஆங்கிலேய சிந்தனையாளர்கள்