உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாரத நாட்டில் தேசீய இயக்கங்கள் தேசீயம் என்பது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சந்தை, அரசியல் எல்லைக் கோடுகள், மன்னராட்சி அதிகாரங்கள் மங்கி, மக்களாட்சி முறையும் அதற்குரிய அரசியல் சாசனங்களும் தோன்றிய மேற்கு நாடுகளில் ஒரு தத்துவமாக ஒரு கருத்து வடிவமாக வெளிப்பட்டது. ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்த கத்தோலிக்க மதத்தலைமையும் உடைந்து தேசீய எல்லைகளுக்குட் பட்ட மத நிறுவனங்களும் தோன்றி நிலை பெற்றன. பாரத நாட்டில் தேசீயம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் என்னும் பெயரில் ஒரு தேசீய மகாசபை என்று பெயர் பெற்று தோன்றி வளர்ச்சியடைந்தது. இந்த இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபை, டநாட்டில்உஇருந்த ஆங்கில கல்வியாளர்களின் மேல்-நாட்டு சிந்தனைப் போக்கிலிருந்தே தோன்றி வளர்ந்தது என்று கூறலாம். ஏற்கனவே, மொகலாய ஆட்சியின் கடைசி காலத்தில் குறிப்பாக ஒளரங்க சீப்பின் ஆட்சி காலத்தில் அந்த ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக சிவாஜி மகாராஜ் தலைமையிலும், குருகோவிந்த சிம்மர் தலைமையிலும் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டு பாரதத்தின் பண்டைய பாரம்பரியப் பெருமைமிக்க ஒரு புதிய தேசீய உணர்வு கருக் கொண்டு வளரத் தொடங்கியது. ஆங்கிலேயர்கள் தங்கள் வியாபாரக் கம்பெனிப் படைகளைக் கொண்டு பாரதம் முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பிடித்தது. 1757-ம் ஆண்டு நடைபெற்ற பிளாசி யுத்தம் தொடங்கி 1857-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கம்பெனிப் படைகள் எண்ணற்ற படுகொலைகளையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் நடத்தின. இந்த அன்னிய ஆக்கிரமி ப்புப் போர்களில் அன்னிய ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய மக்கள் வீரதீரமாகப் போரிட்டார்கள். அந்தப் போராட்டங்களின்