பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீகிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனம் 3| வேதங்களாலும், வேள்வியாலும் கல்விகளாலும் தானங்களாலும் கிரியைகளாலேனும் மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறுயாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா - 48. இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே, மயங்காதே! அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்! 49. சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ங்ணம் வாசுதேவன் அர்ஜூனனிடம் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்ச முற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்-50. அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது. இயற்கை நிலை எய்தினேன் - 51. று பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்கு கண்டனை தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள் - 52. என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும், தவத்தாலும் தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது. - 53. பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும் - 54.