உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் 37 சாகும் பொழுதில் கூட தனது இரு செவிக்குண்டலங்களை தானமாகக் கொடுத்த கைகள், இனிய பாகு மொழியில் புலவர்கள் பாடிப் போற்றிய பாரத ராணியின் கைகள் தென்படுகின்றன. போர்க்களத்தில் பர ஞான மெய்க் கீதையைப் புகன்ற அந்தப் பெருமை மிக்க திருவாய், பகை தீர்க்கத் திறம் தரும் பேரினள் பாரத தேவியின் திருவாய் காணப்படுகிறது. தனது தந்தை இன்புற வேண்டும் என்பதற்காக தான் அரசாட்சியையும் தையலர் தம் உறவையும் இனி இந்த உலகில் விரும்பேன் என்று சபத மேற்ற திருவுள்ளம், அந்தத் தியாகத் திருவுள்ளம் பாரத அன்னையின் திருவுள்ளம் என்பது தென்படுகிறது. அன்பு சிவம், உலகின் துயர்கள் யாவையும் அன்பினிற் போகுமென்று இங்கு முன்பே பொழிந்து உலகை ஆண்டதோர் புத்தன் மொழி பாரத அன்னையின் மொழியாகத் தென் படுகிறது. மிதிலை எரிந்திட வேதப் பொருளைவினவும் ஜனகன் மதி தன் பதியினில் கொண்டதை நின்று முடிக்க வல்ல பாரத அன்னையின் தெளிந்த மதி தென்படுகிறது. தெய்வீக சாகுந்தலம் என்னும் நாடகம் செய்த கவிதையான பாரத தேவியின் அருட் கவிதை தென்படுகிறது. பாரதத்தாயின் பெருவடிவம் பாரதியின் கண்களுக்கு இன்னும் விரிவாகத் தென்படுகிறது. பாரதத்தாய் இத்தனை சிறப்போடு என்று பிறந்தாள் என்று யாராலும் கூற முடியாத அளவிற்கு பண்டைய சிறப்பு மிக்கவள் ஆயினும் இளமை குன்றாத கன்னியாக இருப்பதைப் பாரதி காண்கிறான். இவள் கோடி கோடி முகமுடையாள், ஆயினும் உயிர் ஒன்றாகத் திகழ்வதையும் செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாளாக காணப்படுகிறாள்.