உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் சம்பூரணரூபம் வந்தே மாதரம் என்று பாட்டிசைத்து தாயின் மணிக்கொடிக்கு வணக்கம் செலுத்த ஆயிரமாயிரம் பாரத புத்திரர்கள் அணி வகுத்து அணி அணியாய் நிற்கிறார்கள். அந்தச் சீர்மிகு அணி வகுப்பில், 書 செந்தமிழ் நாட்டுப் பொருநர் கொடுந்தீக் கண் மறவர்கள். சேரன் தன் வீரர். சிந்தை துணிந்த தெலுங்கர். தாயின் சேவடிக்கே பணி செய்திடும் துளுவர். கன்னடர் ஒட்டியரோடு. போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர். பொன்னகர் தேவர் களொப்ப நிற்கும் பொற்புடையார் இந்து ஸ்தானத்து மல்லர். பூதல முற்றிடும் வரையும், அறப்போர் விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறை வரும் கீர்த்தி கொள் ரஜபுத்ர வீரர். பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னர் பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நன்னாட்டார். துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும். அணிவகுத்து நிற்கிறார்கள். அந்த அருமையான அற்புதக் காட்சி பாரதியின் கண் முன்னே காணப்படுகிறது. இத்தகைய பெருமை மிகு பாரதநாடு ஏன் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக அன்னியருக்கு அடிமைப்பட்டுத் துன்ப துயரங்களுக்கு ஆளாயிற்று? இத்தகைய புண்ணிய பூமியிலே இன்று பாமரராய் விலங்குகளைப் போல் வாழ்வதை நினைந்து பாரதி மனம் வருந்தினார். நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று கொதிப்படைந்தார்.