உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் நெளரோஜியும், லோக மான்ய பாலகங்காதரத்திலகரும், லாலா லஜபதிராயும், வ.உ. சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும், மோகன் தாஸ் கரம்சந்திர காந்தியும் தன் முன் வந்து நிற்பதைப் பாரதி காண்கிறார். அச்சம் தவிர் வையத் தலைமை கொள், என்று பாரதி மெய் சிலிர்த்து எழுதுகிறார். சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தைத் தனது தெய்வமாகக் காண்கிறார். ஒரு புதிய தேசீயம், தேச பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்த தேசீயம் பாரதியின் கண் முன்பாக வந்து நிற்கிறது. அந்தப் புதிய தேசீயம் சாதி உணர்வுகளுக்கு அப்பாற் பட்டது. மொழிவழி உணர்வுகளைக் கடந்தது. மத உணர்வுகளைக் தாண்டியது. ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் என்று பாரதி குரல் எழுப்பினார். இந்த நாட்டில் பிறந்த அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் சாதியும் மொழியும் மதமும் தனி மனிதனுக்குரியது என்றும் அதற்கப்பால் அனைவரும் இந்தியர், பாரத புத்திரர் என்றும் இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்களை இந்திய முஸ்லிம்கள் என்றும் இந்த நாட்டில் பிறந்த கிறிஸ்தவர்களை இந்தியக் கிறிஸ்தவர்கள் என்றும் பாரதி கருதினார். பாரதியின் தேசீயம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் வகுக்கப்பட்ட அரசியல் நிர்வாக எல்லைக்கோடுகளுக்கப்பாற்பட்டு செல்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்