உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Հ{) நூலாசிரியரைப் பற்றி : இந்நூலாசிரியர் திரு. அ. சீனிவாசன், வயது 78 சிறந்த தமிழ் எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அத்துடன் தெலுங்கு, மலையாள மொழிகளும் அறிந்தவர். இந்தி மொழியிலும் பரிச்சியம் உண்டு. தமிழில், அரசியல், பொருளாதாரம், தத்துவஞானம், இலக்கியம் தொடர்பான பல நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தும், பல கட்டுரைகள் எழுதியும் தமிழாக்கம் செய்து அவை வெளியாகியுள்ளன. அவர் தமிழ் ஆக்கம் செய்துள்ள முக்கிய நூல்களில் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறும் ஒன்றாகும். திரு. அ. சீனிவாசன், 1980-ம் ஆண்டுகளில் ஜனசக்தி, வார இதழ், நாளிதழ் மார்க்ஸிய ஒளி மாத இதழ் ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவர் ஆற்றியுள்ள சிறந்த எழுத்துப் பணிகளுக்காக சோவியத் நாடு நேரு விருதும், சிறந்த பத்திரிகையாளர் பணிக்காக சர்வதேசப்பட்டயமும் பெற்றுள்ளார். அவர் சில சர்வதேச அமைப்புகளில் இந்தியா பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். திரு. அ. சீனிவாசன் 1925-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி இன்றைய விருதுநகர் மாவட்டம், ரீவில்லிபுத்துர் வட்டம், வத்ராப் ஒன்றியம், மகாராஜபுரம் கிராமத்தில் பிறந்தார். மகாராஜபுரம் கிராமம், சாத்தூர் வத்ராப், விருதுநகர் ஆகிய ஊர்களில் கல்வி பயின்று, இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1943-47 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் சேர்ந்து தகவல் தொடர்பு பொறியாளராகப் பயிற்சி பெற்று பணியாற்றினர். திரு. அ. சீனிவாசன் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டங்களிலும், அரசியல் பணிகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வருபவர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி, சுயமரியாதை இயக்கம், கம்ப்னிஸ்ட் கட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டவர். 1947-ம் ஆண்டு முதல் இந்திய கம்பனிஸ்ட் கட்சியில் முழு நேரமும் பணியாற்றத் தொடங்கினார்.