பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா டாம்பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்பைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். 17. ஜயம் உண்டு (குறிப்பு : இது புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. மணிமணியாகவும் நவரத்னங்களாகவும் சொற்கள் விழுந் திருக்கின்றன. விசனப் பொய்க் கடலுக்குக் குமரன் கைக்கணையுண்டு. என்ன அற்புதமான கவிதை! இவற்றில் எல்லாம்தான் பாரதியாரின் மேதாவிலாசமும் கவிதைச் சிறப்பும் தெரிகின்றன. அவர் ஒரு மஹாகவி என்பது நிலை நாட்டப் பெறுகின்றது. விடுதலைப் போராட்டத்தின் போது இப் பாடல் முழங்காத மேடையில்லை. ஜெயபேரிகை கொட்டடா என்பதும் புகழ்பெற்ற பாடல்தான். விடுதலைப் போராட்டத்திற்கு நேரிடையாக இது உரம் தரா விட்டாலும், இவற்றைப் பாடும்பொழுது எப்படியோ வலிமையும் துணிச்சலும் தாமாகவே ஏ ற் ப ட் டு விடுகின்றன. கவிதையின் மந்திரசக்தியே அதுதான். 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்ற அட்சர லக்ஷம் பெறும்படியான வரிகள் ஆறுதுணை' என்ற கவிதையிலே வந்திருக்கின்றது. இதற்குச் சமான மாகச் சொல்லலாம் இந்த வரிகளை. வீரத்தை நினைக்கும் போது, எப்படியோ முருகன் வந்து விடுகின்ருன். அவன் வேலும் கணையும் வந்து விடுகின்றன.)