பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விடுதலை திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற மூன்று புருஷார்த்தங்களேயும் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்குள் பாடிக் காட்டிய திறமையைக் கண்டு வியந்து சிலர் ஒளவையாரிடம் சொன்னர்களாம். ஒளவையார் நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே வெண்பாவுக்குள் பாடிக் காட்டினளாம். சதல் அறம் தீவினை விட்டீட்டல் பொருள் எஞ்ஞான்றும் காதலிருவர் கருத்தொருமித்-தாதரவு பட்டதே யின்பம்; பரனேரினங் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. - கொடுப்பது தருமம். பாட்டைக் கொடுத்தாலும் சரி ; காட்டைக் கொடுத்தாலும் சரி ; பணம், கல்வி, மருந்து, தைரியம் ஏதேனுமொரு நல்ல பொருளை உடையவன் வேண்டியவனுக்குக் கொடுத்தால் அஃதறம். உலகத்தில் ஸாமான்ய மனிதனைச் சூழ்ந்து மிக்கோர், ஸ்மானஸ்தர், தாழ்ந்தோர் என மனிதர் மூன்று வகையாகக் காணப்படுகிரு.ர்கள். இந்த மூன்று திறத்தாருக்கும் அவன் கொடுக்க வேண்டிய கொடைகள் காலம், தேசம், இவற்றுக்குத் தக்கபடி அந்தந்த விதமாக மாறி கிற்கும். இன்னின்ன காலத்தில் இன்னின்னருக்கு இன்னின்ன பொருள் கொடுக்க வேண்டு மென்பது தர்மிஷ்டனுக்கு ஸுபாவத்திலேயே தெரியும். சேர்க்கப் படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னேயும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்கவேண்டும். கை பற்றினப்டியாகவே இருக்க வேண்டும்; ஆல்ை இயகாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் கிற்காது. செல்வம் சேர்ந்த பிறகு அதன் உரத்தால் பிறருக்குத் தீங்கு செய்வோரும் விரைவிலே கெடுவார். ' அல்லற் பட்டாற்ருது அழுதகண்ணி ரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்று