பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இனி கடந்ததெல்லாம் போக , இனிமேல் கடக்கவேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்ய வேண்டும். கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானல், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்ருமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும். கடவுள் எங்கும் இருக்கிருரே ? எல்லாம் கடவுள்தானே ? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லேயோ செம்பையோ கட்டு, அங்கே தான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?' என்ருல், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக. கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று கம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று கம்பலாமா? கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே கம்மைச் சூழும் அகந்த கோடி ஜீவராசிகளாக கின்று சலிக்கிறது. இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிருனே அவனே கண்ணுடையவன் ' என்பது முன்னேர் கொள்கை. உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. ,ே கான், முதலே, ஆமை, ஈ, கருடன், கழுதை-எல்லோரும் ஒரே உயிர், அந்த உயிரே தெய்வம். ஒன்று கூடிக் கடவுளே வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு தமக்குள் இருக்கும் ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இட முண்டாகுமென்று கருதி முன்னேர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலே வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக,