பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாரதி தமிழ் இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள், இரண்டுங் கலந்தன - எத்தனையோ வித சாஸ்திரங்கள் பயிற்றுகிருர்கள். ஆனல் ஸ்வதந்திரம், ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம்இவை அத்தனே ஜாக்கிரதையாகக் கற்றுக் கொடுப்பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின்படி ஒழுக வேண்டுமென்றும் அங்ங்னம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமான மும், பாவமுமாகுமென்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமேயில்லே. இந்த விஷயத்தைக் கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக் கிருர்கள். ஆனல் ஒழுக்கப் பயிற்சியில்லை. புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை துாரமாக நடப்பவர்களுக்கு திருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனே சிறந்த திருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது. கனவினும் இன்னது மன்னே வினைவேறு சொல் வேறுடையார் தொடர்பு என்று திருவள்ளுவர் பாடியிருக்கிருர். இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேருெரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் துே என்பதேயாம். பீ.ஏ., எம்.ஏ. பரீகூைடிகள் தேறி வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், என்ஜினிர்க ளாகவும், பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், அய்யங்கார், பிள்ளே முதலியவர்களில் எவராவது ஒருவர் தன் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசிய மில்லை என்று கிறுத்தியிருப்பாரா ? “ பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூட பக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது” என்று சிலர் முறையிடுகிருர்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரிகள் பலனின்றிப் பிதற்றுமிடத்தே, அவர்களுடைய சொற்படி