பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பாரதி தமிழ் இருப்பின் அஃதும் கன்ரும். நீ கற் செய்கை தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்ருல் நீ செய்வதெல்லாம் நன்ருகவே முடியும். உனக்குப் புத்தி தெளிந்து விட்டதன்ருே ? புத்தி தெளிவுற்ற இடத்தே. உனக்குத் தீயன செய்தல் ஸாத்யப்படாது. ஆதலால், நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம். இனி, இங்கனம் உரை கொள்ளாதபடி, கற் செய்கை தீச் செய்கை, அதாவது, எல்லா விதமான செய்கையைத் துறந்து விட்டு, ‘அர்ஜுன, நீ எப்போதும் தூங்கிக் கொண்டே இரு' என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேருென்று மில்லை. ஏனென்ருல் கடவுளே மேலே மூன்ரும் அத்யாயத்தில் பின் வருமாறு சொல்லுகிருர் :- மேலும், எவனும் ஒரு கூடிண மேனும் செய்கையின்றி இருத்தல் இயலாது. எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன என. ஆதலால் மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தாங்கக் கும்பகர்ணனலே கூட இயலாது. அவனுக்குக் கூட ஆறுமாஸ் காலம் விழிப்பு உண்டு. ஆனல் ே தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட கஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக்கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப் போலே தொழில் செய்யாதே. பூநீ பகவான் சொல்லுகிருன் :- அர்ஜூன, உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரம் உண்டு. பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதும் இல்லே ' என. ஆதலால், கடவுள் சொல்லுகிருர் : - கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய் கிருனே, அவனே துறவி, அவனே யோகி ' என்று. அறிவுத் தெளிவைத் தவற விடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத் தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டே இருக்கும்.