பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரதி தமிழ் ஒரு பெரிய நல்லபாம்பு ஹ-ஸ்' என்று சீத்காரம் செய்து கொண்டு அகஸ்தியர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்டமாத்திரத்தில் கான் திடுக்கிட்டுப் போனேன். ஐயோ! இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனேக் கொன்றுவிடப் போகிறதே ! இவரை எப்படியேனும் கண்விழிக்கும்படிச் செய்வோமானல் தம்முடைய தவவலிமையில்ை பாம்பை அடக்கிவிடுவார் என்றெண்ணி அவரை விழிக்கச் செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளே அவர்மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பும் அவரை நெருங்கிவந்து அவருடைய பாதத்தில் இரண்டுமுறை கடித்தது. மூன்ரும் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் துாக்கிற்று. அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையச் சுற்றிக்கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரமஸ்ாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக்கொண்டிருந் தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணே எடுத்துப் பூசினர். புண் உடனே ஆறிப்போய் சாதாரணத் தோலாகி விட்டது. இன்த கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒருவார் த்தை பேசக்கூட யோக்கியதையில்லாமல் ஊமை மரமாய்ப் பிறந்துவிட்டோமே என்றெண்ணித் துயரப் பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரி விக்க விரும்பி அவர் காலின்மீது சில மலர்களையும் இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை கிமிர்ந்து என்னே கோக்கி: வேப்பமரமே ' என்று கூப்பிட்டார். வேப்பமரம் பின்னுங்கதை சொல்லுகிறது:" கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ங்னம் என்னே அகஸ்தியர் கூப்பிட்டவுடனே என்னேயறியாமலே என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், என்ன முனிவரே ?' என்ற தமிழ்ச்சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகித மாய்விட்டது. மாற்றிப்பிறக்க வகையறிந்து கொண்டேன், வேப்ப மரப் பிறவி போய் எனக்கு மனிதப் பிறவியுண்டாயிற்றென்று