பக்கம்:பாரி வேள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இடம் 294

என்ற முறை காணப்படுகிறது. இது தொல்காப்பியத். தின் உரையில் பேராசிரியர் மேற்கோளாகக் காட்டும், பாடல்களில் ஒன்று.

பிங்கல நிகண்டில் கடையெழு வள்ளல்கள் இன் ஞர் என்று குறிக்கும் இடத்திலும் பாரியின் பெயரையே முதலில் வைத்திருக்கிருர் அதன் ஆசிரியர்.

பாரி எழினி நள்ளி ஆய் மலையன் ஓரி பேகன் இவர்கடை வள்ளல். இப்படியே பிற்காலத்தில் வந்த மண்டலபுருடர் தாம் இயற்றிய சூடாமணி நிகண்டில், பாரி ஆய் எழினி நள்ளி ... . .

பசுந்தொடை மலையன் பேகன் ஒரியே கடையில் உற்ருேர் - . என்று அமைக்கிருர். இந்த இரண்டு நிகண்டுகளிலும் ஏழு வள்ளல்களில் மற்றவர்களின் பெயர்கள் எப்படி மாறிலுைம் பாரியின் பெயர் முதலிடம் பெற்று. நிற்கின்றது. -

ஏழு பேர்களைச் சொல்லாமல் சில பேர்களைச் சொல்லும் இடத்திலும் பாரியே முன் நிற்கிருன்.

பாரி ஓரி (தொல்காப்பியம், செய்யுள் இயல், 185, நச்சி. . - ஞர்க்கினியர் மேற்கோள்): என்பதும், - o -

வண்புகழ் பாரி கா - -- ... " என்றிசை வாது கூறி - (திருப்புகழ்); என்பதும் இதற்குச் சான்று பகரும்.

சங்க காலத்தில் வாழ்ந்த நல்லிசைப் புலவர்களும். பிற்காலத்துப் புலவர்களும் வள்ளல்களின் பெருமை. யைச் சிறப்பித்துப் பாடும்போது பாரிக்கு முதலிடம் கொடுப்பது மரபாகிவிட்டது. பாரி வேளைத் தமிழுலகம் மறவாமல் பாராட்டும் முறை இதுவானுல் அவனுடைய பெருமையை என்னென்று விரித்துரைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/38&oldid=583856" இலிருந்து மீள்விக்கப்பட்டது