உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரி வேள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரி வேள்

பாரியின் மகளிர் அழகிலும் அன்பிலும் சிறந்து விளங்கும் செய்தியும் அவனுடைய புகழோடு தமிழ் நாட்டிற் பரவியது. புலவர்கள் தாம் அறிந்த சிறப்புக் களைத் தம் வாயே முரசாக நாவே குறுந்தடியாகக் கொண்டு அறைந்து பரப்பும் இயல்புடையவர்கள் அல் லவா? அவர்கள் பாரிக்கு எத்தனை சிறப்பு உண்டோ அத்தனையையும் எடுத்துப் பாராட்டித் தமிழுலகில் பரப்பினர். அந்த வகையில் பாரி மகளிரின் பெருமை யும் பரவியது. . . . . .

தமிழ் நாட்டில் இருந்த குறுநில மன்னர்களின் காதில் அங்கவை சங்கவை என்னும் அப் பெண்களின் அறிவாற்றலையும் அழகையும் பற்றிய செய்திகள் விழுந்தன. மணமாகாமல் இருந்த வேளிர் சிலர் அவர்களை மணந்துகொள்ளலாம் என்று விரும்பினர். பின்பு தம்முடைய நிலையையும், பாரியினுடைய நிலை யையும் எண்ணித் தமக்குக் கிட்டாப் பொருள் என்று கைவிட்டனர். . . . . . . . . . . .

ஆனல் பாரிவேளுக்கு இரு மகளிர் மணம் செய்யும் பருவத்தில் இருக்கிருர்கள் என்ற செய்தி பாண்டியனுக்குத் தெரிந்தபோது, அவர்களை மணம் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைவு ஏற்பட்டது. முடியுடை மன்னர்கள் குறுநில மன்னர்களின் பெண் களை மணந்து கொள்வது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்தது. புகழிற்ை பெரியவகிைய பாரியின் மகளை மணப்பதால் தனக்கும் புகழ் உண்டாகும் என்று பாண்டிய மன்னன் நினைத்தான். ஆனல் அவன் முன்பே மணம் புரிந்துகொண்டவன். பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். ஆலுைம் பல மகளிரை மணந்துகொள்வது மன்னர்களுக்கு வ ழக் கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/47&oldid=583865" இலிருந்து மீள்விக்கப்பட்டது