உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரி வேள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி

முடி மன்னர் மூவருடைய படைகளும் பறம்பு மலையின் அடிவாரத்திலேயே இருந்தன. போர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல், உண்பதும் உறங்கு வதுமே வேலையாகப் படை வீரர்கள் இருந்தார்கள். அந்த வாழ்வு சிறையிலே இருப்பது போன்ற வேத னையை அவர்களுக்கு அளித்தது. மலையின்மேல் உள்ளவர்களை வெளியில் வராமல் செய்துவிட்டோம் என்று நாம் மகிழ்ச்சி அடைந்தோம். இப்போது நாமும் அவர்களைப்போலவே இருக்கிருேம். வில் இருந் தும் அம்பு எய்யாமல், வாள் இருந்தும் வீசாமல் சோம்பேறி யாகிவிட்டோம். நாம் நினைத்தபடி வேறு இடங்களுக்குப் போக முடியவில்லை. இந்த மலையைக் காத்துக்கொண்டு, கட்டிப் போட்ட மாடுகளைப்போல இங்கே கிடக்க வேண்டியிருக்கிறது' என்று அவர்கள் பொருமிஞர்கள். -

பறம்பு மலையின்மேல் உள்ளவர்கள் அங்கே கிடைத்த உணவுப் பொருள்களைக் கொண்டு காலந் தள்ளினர்கள். குறிஞ்சி நிலத்தின் பண்பை நன்கு அறிந்த கபிலர் மலைமேல் விளையும் பொருள்களில் எவை எவை நல்லுணவாகப் பயன் படும் என்று தேர்ந்து அவற்றைச் சேமிக்கச் செய்தார். உணவுப் பொருள்களைத் தொகுத்து இறைவன் திருக்கோயிலி லும் பாரியின் அரண்மனையிலும் சேமித்து வைத்து, அவ்வப்போது மக்களுக்கு வழங்கச் செய்தார். எப். போதும் நெல்லஞ்சோற்றை உண்ட மக்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/63&oldid=583881" இலிருந்து மீள்விக்கப்பட்டது