பக்கம்:பாற்கடல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

லா. ச. ராமாமிருதம்


தொடைமீது மறுகாலைப் போட்டு, பாதத்தை ஆட்டிக் கொண்டு, நிமிர்ந்த முதுகுடன் மணிக்கணக்கில் உட்கார்ந்தவண்ணம் (சினிமாவில் வில்லன் 'ரிஷி” மடாதிபதி போஸ்) அது அரைப்பட்டினியோ, கால் பட்டினியோ, பேச்சிலோ, உட்கார்ந்திருக்கும் நிலையிலோ மிடுக்குக் குறையாது. வாசற்படி இறங்கி, யாரையும் கைதாழ்ந்து கேட்க மாட்டார்கள். உதவுபவர்கள் தங்கள் கெளரவமாக பாவித்தல் வேண்டும். பேச்சிலும் அதிகாரம். இது என் தகப்பனார் பார்த்த கோணம். நான் சிறியன். ஆனால் பொதுவாக அந்தக் கூட்டத்தின் வணங்காமுடித் தன்மையை என்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது.

இந்த அட்டஹாசக் குழாம் நடுவே ஒரே வரி சொருகிய 'ப்ரவர்த்த ஸ்ரீமதி எனும் பெயர், கண் தப்பியிருப்பின், அமிர்தமய்யர் பேறுகளின் எண்ணிக்கை முழுப்பெறாது. அவள் என் அம்மாவைப் பெற்ற பாட்டி அவள் கீர்த்தி பெரிதாகையால் தனியாகச் சொல்லும் நிலை கொண்டது.

வெள்ளைப் பீங்கான் நிறம். கன்னங்கள் அசல் பீங்கான்கள் போலவே பளபளக்குமாம். (வேறேதும் நினைத்துக்கொள்ள வேண்டாம்), ஜலம் விழுங்கினால் நெஞ்சில் கண்ணாடிபோல் தெரியுமாம். அவள் நிறத்துக்குப் பார்த்தவர்களின் அலங்கார பாஷை. இவளுக்கு நைடதம், நன்னூல் பாடம் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

பயன்?

ஆங்கரையில் சம்பந்தம். பெரிய குடும்பம். வேளைக்கு ஆளுக்குக் கால்படி அரிசி வேணும். அதற்கு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/100&oldid=1533377" இலிருந்து மீள்விக்கப்பட்டது