பக்கம்:பாற்கடல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

லா. ச. ராமாமிருதம்


கொண்டே இருப்பவை. பின்னால் திரண்டுவரும் அமுதத்தின் தாரைகள், திவலைகள் நாம். ஏற்கெனவே நாம் அமரபானம் செய்தவர்கள்தாம். இந்த பாக்கியத்தை, இந்த ஆனந்த கீதத்தைத்தான் எழுத்தாளன் பாடுகிறான். ஜீவ பரம்பரையின் மாண்பைப் பாடுகிறான். பாற்கடல் பாடுகிறது. கடைபவர் பாடுகிறார்கள்; கயிறாய்த் திகழும் பாம்பும் விஷத்தைக் கக்கிப் பாடுகிறது.

”ஏலே வாலி! ஐலஸா !”

லின் யூ டாங், Wisdom of India and China என்கிற புத்தகத்தில் நம் வேதங்களைப் பற்றி எழுதும்போது சொல்கிறார்: And God Created himself –

இந்த வாக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பம் முடிவு எல்லாமே இதில் அடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. பிறவிக்கு ஒரு நோக்கம், நிமித்தம் உண்டு என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?

இந்த ஏற்பாட்டில், எழுத்து என்பது என் பிறவியின் நிமித்தமாக இருக்குமெனில் எனக்கு மேற்கூறியபடி தோன்றிய பாற்கடலின் கடையலில் நினைவுக்கும் முந்திய காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அமரகீதத்தில், நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் கடைசி மூச்சுவரை என் நிமித்தமாக என்னின்று வெளிப்பட்ட அத்தனை எழுத்துக்களில் ஒரு அக்ஷரம் சேர்ந்துவிடின் மற்றவை அத்தனையும் நீர்த்துப் போகட்டும். என் வாழ்க்கை பயனடைந்துவிட்டது என்கிற உவகையில் என் மரிப்பு எனக்குக் கிட்டுமா? பிராணனின் மூச்சோடு சேர்ந்துவிடும் அநாமதேயப் பதவிதான் மகத்தான பதவி. லா.ச.ரா. எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/126&oldid=1533978" இலிருந்து மீள்விக்கப்பட்டது