பக்கம்:பாற்கடல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

லா. ச. ராமாமிருதம்


—மிஸ் மெனாவதி, வெள்ளி Mugஇன் வளை பிடியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் Mugஇன் மூடியைப் பொத்திக்கொண்டு Mugஐச் சாய்த்ததும் தேனீர், கெண்டியிலிருந்து தங்க நரம்புகள் போல், பீங்கான் கோப்பையுள் பாய்ந்தது.

மாதம் ஒரு புத்தகங்களில், பல சஞ்சிகைகளில் சர்வ சாதாரணமாக பவனி வரும் வைபவங்கள் இவை. இவற்றைப் படிக்கத்தான், பவனி வருகின்றன. ஆசை விழிகளால் அல்வாத் துண்டுகளாக விழுங்கப்படுகின்றன. நடக்கட்டும் விருந்து.

ஐயா, எழுதியவர்களையும் படிப்பவர்களையும் தான் கேட்கிறேன். நம் வீடுகளில், எத்தனை இல்லங்களில் இது போன்ற - நம் இயல்பான வாழ்க்கை முறைக்கும், நமக்குக் கிட்டியிருக்கும் வாழ்க்கைத் தடத்துக்கும் பொருந்தாத வசதிகள் இருக்கின்றன? சர்க்கரைக்கும் மண்ணெண்ணெய்க்கும் Palmotinக்கும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நிற்கும் க்யூ வரிசைகளுக்கு இதுபோன்ற எழுத்துக்களைப் படிப்பது க்யூ நேரத்துக்கு மறதிக்கு உதவலாம் என்பது தவிர, வேறு உருப்படியான பயன்கள் இதனால் என்ன? முதிய தலைமுறைக்கு இவ்வசதிகள் தெரியவும் தெரியா; புரியவும் புரியா. இளைய தலைமுறையை அதுபோல் நினைக்க முடியுமோ? முதலில் ஆச்சரியம், பிறகு வியப்பு, பிறகு ஏக்கம், பிறகு புழுக்கம், நாளடைவில் நெஞ்சில் ஊறும் நச்சுத்தான் கண்ட பலன்.

விவரித்திருக்கும் கானல்நீர்க் காட்சிகள் அநேகமாகச் சாந்தம், சஃபையரில் 70 mm திரையில் கண்டவையே அன்றிக் கண்கூடு கூட அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/156&oldid=1534066" இலிருந்து மீள்விக்கப்பட்டது