பக்கம்:பாற்கடல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

லா. ச. ராமாமிருதம்


பொறுத்தமட்டில் தான் என்னுடைய இந்த விவரிப்புவேருடன் பிடுங்கிக்கொண்டு பூகம்பமாக நிகழ்கிறது. சில இடங்களில் விசன தேவதையாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து வளர்கிறது. சில இடங்களில் பட்டுப் பூச்சி தன்னைச் சுற்றி நூற்றுக்கொண்ட நூலிலேயே தன் சமாதியைக் கண்டு விடுவதுபோல் பிரத்யேக சாந்தி (எனக்காக எழுதிக் கொள்கிறேன்) யாகக் கூடு கட்டுகிறது. எதைத் தள்ளுவது? எதைத் தழுவுவது?

Albert Schweitzer இதை Reverence for Life என்கிறார்.

யேசு, ‘உன்னுயிர் போல் மன்னுயிர்” (Love thy neighbour as thyself) என்கிறார்.

சங்கரர், ’தத்வமஸி’ என்கிறார்.

Sister Theresaவிடம் காணும் எல்லையற்ற கருணை (Compassion)யும் இதுதான்.

நேரு, 'என் அஸ்தியை வயல்களில் இறைத்து விடுங்கள்! என்று எழுதி வைத்ததும் இதுதான்.

ஆத்மாவின் தேடல் மார்க்கங்களில் எழுத்தும் ஒன்று.

உயிரின் உயிலை எழுதி வைப்பதற்கே எழுத்து.

இஸங்களை (isms) விட்டுவிட்டு நாம் வந்த வழியைக் கொண்டாடிக் கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/166&oldid=1534269" இலிருந்து மீள்விக்கப்பட்டது