பக்கம்:பாற்கடல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

169


அவருக்குச் செய்யும் எங்களால் முடிந்த உபகாரம். வேறென்ன உதவி எங்களால் சாத்தியம்? அண்ணா கோயமுத்தூரில் சிதம்பர மாமா வீட்டில் படிக்கிறான்.“

மேல் காண்பவை, வாய்விட்டுச் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஆனால் அவரவர் பார்வைகள்.

அந்த மஹானுபாவன், சாப்பாடு முடிந்து பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்க்கும்வரை காத்திருந்து கூடத்தை மட்டும் விட்டு மற்ற அறைகளை (சமையல் அறை உள்பட)ப் பூட்டிக்கொண்டு போய்விடுவாராம். கட்சிக்காரனும் இல்லாமல் எந்தக் கச்சேரிக்கு அப்படிப் பிரதி தினமும் போவாரோ?

மஹா சந்தேகப் பேர்வழி. டப்பாவைத் திறந்து குழந்தைகள் முந்திரிப் பருப்பு வீசைக்கணக்கில் வாங்கி வைத்திருப்பதைத் தின்றுவிடுமோ என்கிற பயமோ? அல்லது சர்க்கரையை அள்ளிப் போட்டுக்கொண்டு விடுவார்களோ ? இல்லை, பிற்பகலில் அவசர அவசரமாக அம்மாப்பெண் ரவா உப்புமா கிளறிக் குழந்தை ளுக்கும் போட்டுத் தானும் தின்றுவிட்டால்..?

குழந்தைகள் கூடத்தில் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருக்கும். பிறகு பக்கத்துக் குடித்தனத்துக்கு விளையாடப் போவார்கள். அந்த வீட்டுக் குழந்தைகள் மதிய உணவு வேளையாக இருந்தால், அந்த வீட்டு மாமிக்கு அந்தச் சமயம் மனம் இரங்கியிருந்தால் - இவர்களுக்கும் கிடைக்கும். குழந்தைகள் வயிற்றுள் ஓநாய் பிடுங்கும். ஆனால் வாய் திறந்து கேட்கமாட்டார்கள். அம்முவாத்துப் பாடம் அதுதான்.

இந்த அதிர்ஷ்டம் தினப்படி வாய்த்துக் கொண்டிருக்குமா ? இல்லாத நாளில் விளக்கு வைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/175&oldid=1534278" இலிருந்து மீள்விக்கப்பட்டது