பக்கம்:பாற்கடல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

லியாணமான கையோடு சோனா அத்தை தனிக் குடித்தனம் போய்விட்டாள்.

ஆனால், அதே பந்தலில் திருமணம் ஆன அம்மாவுக்கு, ஏழு எட்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பதவி கிட்டிற்று என்பது அவள் விதியின் விளைபாட்டு.

அண்ணாவுக்கு பெங்களுரில் வேலை, லீவுக்கு லீவு லால்குடி வந்துவிடுவார். வாத்தியார் வேலையில் லீவுக்குக் கேட்பானேன்! நவராத்திரி (அல்லது மைக்கேல்மஸ்), கிறிஸ்துமஸ், பொங்கல், கோடை விடுமுறை; வெள்ளையன் ராஜ்யம். அவன் பண்டிகை தவிர, இந்துப் பண்டிகைக்கு வேறு.

ஆம்படையான்தான் அப்பப்போ வந்துவிடுகிறானே என்பதன்றி தனிக்குடித்தனம் உடனே வைக்காததற்கு இன்னொரு காரணம் உண்டு. ஊருக்கு அண்ணா அனுப்பும் மாதாமாதக் கப்பம் பாதிக்கப்படுமே! குடும்பம் என்றால் அவசரக் கடன்கள், எதிர்பாராத செலவுகள் அப்பப்போ எத்தனை எத்தனை! ஒருவாறு சமாளிச்சுத் தலைநிமிர்ந்து கொண்டுதானே சிறிசுகள் அவசரத்தை கவனிக்க முடியும் சிறிசுகளுக்கு என்ன அவசரம்? வயசு வேணது கிடக்கு.

'பாற்கடல்' கதையில் ஒரு வாக்கியம் வருகிறது. 'குடும்பம் என்பது பாற்கடல்' இந்த வாக்கியந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/190&oldid=1534293" இலிருந்து மீள்விக்கப்பட்டது