பக்கம்:பாற்கடல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

லா. ச. ராமாமிருதம்


பேக்குலே கொஞ்சம் விடுங்கோ’ என்றானாம். அது மாதிரி என்று அந்தக் கதையும் சொல்வார். நாங்கள் முழங்காலை இறுகக் கட்டிக்கொண்டு, குதூகலத்தில் குமுங்குவோம்; கொக்கரிப்போம்! எங்களுக்கு நா சுரக்கும்.

“சரி, அம்மாப்பெண்ணே ! பையன்கள் ரொம்ப ரஸிக்கிறான்கள். நாளைக்கு மைசூர் ரஸம் வைத்துவிட வேண்டியதுதான்.“

மைசூர் ரஸம், கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல். கத்தரிக்காயை நாலாகப் பிளந்து உள்ளே மஸாலாப் பொடி அடைத்து, வாணலி எண்ணெயில் அப்படியே போட்டு, மேலே தட்டுப் போட்டு மூடி, உள்ளே அப்படியே அது குமுங்க வேண்டியதுதான்.

நமுட்டு விஷமத்தில்தான் விவரிக்கிறேன். இதைப் படித்துவிட்டுப் பிள்ளையாண்டான்மார்கள் படப் போகும் எரிச்சலில் நான் இப்பவே காணும் உவகை தான்.

“கதையில் கூடவா அப்பா சாப்பாட்டு விவகாரத்தைக் கொண்டு வரணும்? மானம் போகிறது. அது என்ன கத்தரிக்காய் எண்ணெய்க் கறியோ? அது மாறினால் உருளைக்கிழங்கு வதக்கல். பாங்க் மானேஜராக உத்தியோகம் பண்ணுண மனுஷனா இருக்கா பார்? என்னவோ சமையல்காரன்...” உஷார் ! உஷார் பசங்களா! நா காக்க ஜாதியைப் பற்றிப் பேசுவதோ தொழிலைப் பழிப்பதோ சட்ட விரோதம்.

இவர்கள் ஏன் இப்படிக் குமுறுகிறார்கள்? வகையாகப் பணணிப் போட்டால் ஒரு வளை வளைப்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/192&oldid=1534295" இலிருந்து மீள்விக்கப்பட்டது