பக்கம்:பாற்கடல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

லா. ச. ராமாமிருதம்


அத்தியாயம் வரை வருகிறான். அடேயப்பா! அவன் தின்கிற தீனியும், பருகுகிற குடி வகைகளும், நமக்குப் புரியாவிட்டாலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. கணக்கெடுத்தால், புத்தகத்தில் கால்பங்கு இந்த விவரத்துக்கே தேறும். புத்தகமும் சுவாரசியமானது.

மேல்நாட்டுக் கற்பனை இலக்கியத்தில் மாற்றி மாற்றி டான்ஸ், நாடகம், Opera, இடையிடையே விருந்து, சிறு தீனி, ஐஸ்கிரீம், சாக்லெட், முந்திரி, காப்பி இதுபோல இந்தத் திண்டியும் தீனியுமே கதையின் சம்பவக்கோவைக்கு இன்றியமையாத காரைப் பூச்சாக அமைகின்றன.

வெகு சமீபத்தில் –

அகதா கிறிஸ்தியின் மர்மச் சிறுகதைகள் இரண்டு படித்தேன். தலைப்புகள் என்ன தெரியுமா? "A drink of Chocolate A Box of Chocolate தனித்தனி, வேறுபட்ட கதைகள். ஆனால் தலைப்பின் அடிப்படையில்தான் விஷயம்.

Charles Dickens-ன் அமர நாவல் Tale of Two Cities கதாநாயகன் Sydney Carton தன் வாழ்க்கை வியர்த்தமாகப் போனதைக் கண்ணாடிக் கோப்பையிலிருந்து பூமியில் மதுவைச் சிந்திச் சின்னமாக உணர்த்துகிறான்.

Victor Hugoவின் இதிகாச காவியம் Les Miserable கதாநாயகன் Jean Val jean இழைத்த குற்றமே, பட்டினி கிடக்கும் தன் சகோதரியின் குழந்தைகளுக்காகத் திருடிய ரொட்டியில் நேர்ந்து, அதற்காக அவன் சிறை சென்று அனுபவித்த துன்பங்களுக்கும் அந்தக் காவியத்துக்கே அஸ்திவாரமாகவும் அமைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/194&oldid=1534297" இலிருந்து மீள்விக்கப்பட்டது